விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பானை சின்னம் கேட்டு தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டதோடு தமிழ்நாடு தவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களிலும் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கடந்த 20ஆம் தேதி டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு சென்ற திருமாவளவன் தனது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்கும்படி கோரிக்கை மனு அளித்தார்.
விடுதலை சிறுத்தைகள் தமிழ்நாடு தாண்டியும் போட்டியிடுவதற்கு காரணம் என்ன?
நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டது. அந்த கட்சி 11 மாநிலங்களில் போட்டியிடுவதாக சொன்னதால் கரும்பு விவசாயி சின்னத்தை அந்த கட்சிக்கு ஒதுக்கிவிட்டது தேர்தல் ஆணையம்.
அதேபோல பானை சின்னத்தையும் வேறு ஏதாவது கட்சிக்கு ஒதுக்கிவிடக் கூடாது என்பதால்தான்… 5 மாநிலங்களில் போட்டியிடப் போகிறோம் என்று தேர்தல் ஆணையத்திடம் உடனடியாக தெரிவித்து பானை சின்னத்தை தக்க வைத்துக் கொள்ள கடிதம் எழுதியிருக்கிறார் திருமாவளவன்.
ஏற்கனவே தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ள திருமாவளவன், பானையை தக்க வைக்க இந்த திடீர் உத்தியை கையிலெடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
’தெளிவாக எழுதி கொடுங்கள்’ : மருத்துவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
இறுதிக்கட்டத்தை எட்டிய புரோ கபடி… மகுடம் சூடப்போவது யார்?