நேற்று சட்டமன்றத்திலிருந்து மதியம் 1:15 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு கிளம்பினார். அவர் கிளம்பிய அடுத்த சிறிது நேரத்தில் உதயநிதியும் புறப்பட்டார். அதைத் தொடர்ந்து மற்ற திமுக எம்.எல்.ஏக்களும், சில அமைச்சர்களும் வெளியே சென்றனர்.
அந்த நேரம் பார்த்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக ஒன்றரை மணி நேரத்திற்கு சட்டமன்றத்தில் சராமரியாக கேள்விகளை எழுப்பினார். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் மட்டுமே இருந்து சமாளித்து வந்தனர். எதிர்கட்சிக்கு ஆதரவாக கைதட்டல் சத்தமும், பெஞ்ச் தட்டும் சத்தமும் சட்டமன்றத்தில் பறந்திருக்கிறது.
ஆளுங்கட்சியான திமுக தரப்பில் பெருமளவில் எம்.எல்.ஏக்கள் இல்லாததால் சைலண்டாக இருந்திருக்கிறது. எது ஆளுங்கட்சி என்ற சந்தேகம் வரும் அளவிற்கு சட்டமன்றத்தில் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றதால், வரும் 19-ம் தேதி பட்ஜெட் தொடக்க நாளிலிருந்து திமுக எம்.எல்.ஏக்கள் முழுநேரமும் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்று கொறடாவிடம் இருந்து உத்தரவு பறந்திருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஏதே டைட்டானிக்கும்… இந்தியா கூட்டணியும் ஒன்னா? : அப்டேட் குமாரு
எலெக்சன் ஃப்ளாஷ் : திமுக பக்கம் சாயும் கிருஷ்ணசாமி…பின்தொடரும் ஜான்பாண்டியன்!