எலெக்ஷன் ப்ளாஷ்: நீலகிரி தொகுதி – தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக!

Published On:

| By Kavi

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், மோடியின் பாசத்திற்குரியவருமான மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவதற்காக திட்டமிட்டு தொடர்ந்து அந்த தொகுதியிலேயே தங்கி மக்கள் சந்திப்புகளிலும், பரப்புரைகளிலும் ஈடுபட்டு வந்தார். மத்திய அரசின் சாதனை விளக்கக் கூட்டங்களையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில் தொகுதியில் சைலண்டாக நடத்தப்பட்ட சர்வேயில் எல்.முருகன் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. தோல்வியும் கூட மோசமானதாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி தொகுதியில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்து, டெல்லி மேலிடத்திடம் அழுத்தம் கொடுத்து தனக்கு எப்படியாவது மீண்டும் ராஜ்யசபா சீட் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி பதவிக்கு எல்.முருகன் போட்டியிடுவதாக பாஜக சார்பில் அறிவிப்பு வெளியாகியிருப்பது அதனை உறுதிபடுத்தியுள்ளது. பாஜகவின் முன்னாள் தலைவரே நீலகிரி தொகுதியில் போட்டியிலிருந்து ஒதுங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜக தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் : ஜாக்டோ ஜியோ

காதலர் தினத்தில் சரிந்த தங்கம்… பரிசளிக்க சரியான தருணம் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.