அண்ணாமலையின் நடைப் பயணம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிப்ரவரி 11 சென்னை வந்தார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.
நேற்று இரவு கிண்டியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் மாநில நிர்வாகிகளையும், கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால், வடசென்னை தங்கசாலையில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு எந்த நிர்வாகிகளையும் சந்திக்காமல் நேரடியாக விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
முன்னதாக அவர் சென்னை வந்தபோது விமான நிலையத்தில் வரவேற்க ஏ,.சி. சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் தவிர வேறு எந்த கட்சித் தலைவர்களும் வரவில்லை.
பாமக, தேமுதிக, தமாகா, அமமுக போன்ற தலைவர்களைத் தொடர்புகொண்டு நட்டாவை வரவேற்க வருவது பற்றி பாஜக அழைத்தபோது, அவர்கள் ஆலோசித்து சொல்கிறோம் என்று மழுப்பிவிட்டார்கள்.
மேலும், நட்டாவின் பொதுக்கூட்டத்துக்கு போலீஸும் கடும் கட்டுப்பாடுகளை போட்டதால் கூட்டத்தையும் கூட்ட இயலவில்லை. இத்தகைய காரணங்களால் நட்டா கோபத்தோடு டெல்லிக்கு புறப்பட்டுவிட்டார் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி!