நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் எழுந்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கி இருக்கிறது.
இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை எப்போது அறிவிக்கும் என்ற கேள்விக்கு பிரதமர் மோடியின் குஜராத் பயணம் பதில் சொல்வதாக அமைந்திருக்கிறது.
வரும் மார்ச் 12ஆம் தேதி மாலை குஜராத்தில் பிரதமர் மோடி அரசு நிகழ்வில் கலந்து கொள்கிறார். அதுவே இரண்டாவது முறை பிரதமராக அவர் கலந்து கொள்ளும் கடைசி அரசு நிகழ்வாக இருக்கும்.
பிரதமர் குஜராத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அநேகமாக அதற்கு அடுத்த நாள் மார்ச் 13ஆம் தேதி தேர்தல் அறிவிக்கை முறைப்படி வெளியிடப்படும் என்கிறார்கள் தேர்தல் ஆணைய வட்டாரங்களில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– வேந்தன்
எலக்ஷன் ஃபிளாஷ் : சிறுத்தைகள் மதிமுகவை கிண்டலடித்த திமுக குழு!