திமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் நடக்கிறது. காலை 6 முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
அரசின் திட்டங்கள் வந்து சேர்ந்திருக்கிறதா என்றும், வேறு என்ன கோரிக்கை இருக்கிறது என்றும் கேட்டுக் கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் திமுக சார்பிலான ஸ்டிக்கரை கதவில் ஒட்டிவிட்டு… துண்டுப் பிரசுரங்களையும் கொடுத்து வருகிறார்கள். ஸ்டாலின் படம் இடம்பெற்றுள்ள அந்த ஸ்டிக்கரில், ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்… பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
திண்ணைப் பிரச்சாரத்தில் விநியோகிப்பதற்காக துண்டுப் பிரசுரங்களையும், ஸ்டிக்கர்களையும் தலைமையே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கிறது.
கடந்த ஒரு வாரமாக திண்ணைப் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் ‘திமுக ஸ்டிக்கர் ஒட்டிய வீடுகளுக்குதான் ஓட்டுக்குப் பணம் கொடுப்பார்கள்’ என்ற தகவல் மக்களிடையே தீயாக பரவி வருகிறது. இதனால் திமுகவின் திண்ணைப் பிரச்சாரக் குழுவினரை வரவேற்கும் மக்கள், தங்கள் வீட்டு கதவில் ஸ்டிக்கர் ஒட்டுமாறு வற்புறுத்துகிறார்கள்.
அதனால் ஸ்டிக்கர் பற்றாக்குறையில் இருக்கிறார்கள் திண்ணைப் பிரச்சாரக் குழுவினர். மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டிக்கர் வேண்டும் அனுப்புங்கள் என்று நிர்வாகிகள் கேட்க, மாசெக்களோ, ‘தலைமை இவ்வளவுதான் அனுப்பியிருக்கிறது’ என்று சொல்லி வருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
எலக்ஷன் ஃபிளாஷ் : மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!
எலக்ஷன் ஃபிளாஷ் : சிறுத்தைகள் மதிமுகவை கிண்டலடித்த திமுக குழு!
ராஜூ முருகனுக்கு குட்பை சொன்ன எஸ்.ஜே.சூர்யா: அடுத்த ஹீரோ இவர்தான்!
எலக்ஷன் ஃபிளாஷ் : மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!