தனது அரசியல் பயணத்தை திமுக கூட்டணியில் ஆரம்பித்த சரத்குமார், 2007ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார்.
பின்னர் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட சரத்குமாரின் சமக, தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து சரத்குமார் களம் காண்பார் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தனது சமத்துவ மக்கள் கட்சியை முழுதாக பாஜகவில் இணைத்துள்ளார்.
பாஜகவில் முழுமையாக இணைத்துக்கொண்ட சரத்குமாருக்கு முக்கிய பதவி தரவேண்டும் என்று சமக நிர்வாகிகள் அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி இன்று கட்சி இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலையும், ’சரத்குமார் தேசியத்துக்கு தேவைப்படுகிறார். அவரை சிறிய வட்டத்துக்குள் அடைத்துவைக்கக் கூடாது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மத்திய இணையமைச்சர் பதவி அந்தஸ்துடைய தேசிய வாரியங்களில் முக்கிய பதவியை தர பாஜக வாக்கு கொடுத்திருப்பதாக சரத்குமார் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தேர்தல் பத்திர விவரங்களை வழங்கிய எஸ்.பி.ஐ : உடனே வெளியிடுமா தேர்தல் ஆணையம்?
எலெக்ஷன் ஃபிளாஷ் : பாஜக அணியில் பாமக!