எலக்ஷன் ஃபிளாஷ் : சிறுத்தைகள் மதிமுகவை கிண்டலடித்த திமுக குழு!
திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து விவாதிப்பதற்காக அறிவாலயம் செல்லும்போது, அவர்களிடம் திமுக குழுவினரின் அணுகுமுறைகள் குறித்து குமுறலும் புலம்பலும் தொடர்கிறது.
திமுக குழுவில் உள்ள சில சீனியர்கள் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளை பார்த்து எள்ளலாகவும் ஏக வசனத்தோடும் பேசுவது என்கிற புகார் இந்த முறையும் எழுந்துள்ளது. குறிப்பாக மதிமுகவினரிடம் ‘சீட்டு கேட்குறீங்களே 50 கோடி பணம் இருக்கா?’ என டி.ஆர்.பாலு கேட்டதும், விடுதலை சிறுத்தைகளிடம் ‘பொதுத்தொகுதியை கேட்கிற அளவுக்கு வளந்துட்டீங்களா?’ என கேட்டதும் புகார்களாக சென்றன.
கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை விட, இதுபோன்ற அணுகுமுறைகள் கூடுதல் வருத்தம் தருவதாக முதல்வரிடம் கூட்டணித் தலைவர்கள் சிலரே தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கூட்டணி பேச்சுவார்த்தை குழுவின் தலைவரான திமுக பொருளாளர் டி. ஆர். பாலுவிடமும் அந்த குழுவில் உறுப்பினராக இருக்கிற முன்னாள் அமைச்சர் பொன்முடியிடமும், கூட்டணி கட்சிகளிடம் கடுமையாக பேசாதீங்க அவங்களை மதிச்சு இணக்கமாக நடந்து கொள்ளுங்க என்று முதலமைச்சர் ஸ்டாலின் சற்று கடுமையாகவே கூறியிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– வேந்தன்
”பாஜவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வழக்கு தொடர்வேன்” : சீமான்