பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட பாஜகவின் பிரச்சாரக் கூட்டம் நேற்று (மார்ச் 4) சென்னை நந்தனத்தில் நடந்தது. இதில் பிரதமர் வருவதற்கு முன் பாஜக நிர்வாகிகள் பேசினார்கள்.
பாஜகவின் மாநிலச் செயலாளார் கராத்தே தியாகராஜன் பேசியபோது, “எடப்பாடி அண்ணன் நம்மை பற்றி இன்னும் விமர்சிக்கவில்லை. ஆனால் இந்த மைக் டைசன் இருக்கிறாரே…’ என்று ஜெயக்குமாரை பற்றி பேசத் தொடங்கினார்.
அப்போது கராத்தேவை நோக்கி வந்த மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தமும், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனும், அவரிடம் காதோடு காதாக, ‘அண்ணே அதிமுகவை பத்தி பேச வேணாம்ணே’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும், ‘இன்னுமாய்யா அவங்களை நம்பிக்கிட்டிருக்கீங்க?’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
ஏற்கனவே தொலைக்காட்சி விவாதங்களிலும், பேட்டிகளிலும் அதிமுகவை விமர்சிக்க பாஜக நிர்வாகிகளுக்கும் தடை போட்டிருக்கிறது பாஜக தலைமை. தேர்தல் பிரச்சாரத்திலும் அதிமுகவை பாஜகவினர் விமர்சிக்கவில்லை என்றால், திமுக இதைப் பயன்படுத்தியே அரசியல் செய்ய வாய்ப்பாகிவிடும் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.
-வேந்தன்
புதிய வரலாறு: இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள்… ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!
மம்தாவுக்கு எதிராக தீர்ப்புகள் கொடுத்த நீதிபதி பாஜகவில் இணைகிறார்… யார் இந்த அபிஜித் கங்கோபாத்யாய்?