தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்த அதிமுக அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியை கொண்டு வர தீவிரமாக இருக்கிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் இன்றைய புரோகிராம் மதியத்திற்கு மேல் தைலாபுரத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்தடைவது. பின்னர், சென்னையில் உடல் நல பரிசோதனையை முடித்துவிட்டு அன்புமணி பேத்தியின் பிறந்தநாளில் கலந்து கொள்வது தான்.
இதை நேற்றே அறிந்த எடப்பாடி பழனிசாமி, வேலுமணியையும் தங்கமணியையும் அழைத்து, “டாக்டருடன் சி.வி.சண்முகம் தான் பேசி வருகிறார். நீங்கள் டாக்டர் சென்னைக்கு கிளம்புவதற்கு முன்பே தைலாபுரத்தில் போய் சந்தியுங்கள்” என்று சொன்னாராம். இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் வேலுமணி.
ராமதாஸ் இவர்களை தைலாபுரத்தில் சந்திப்பாரா சென்னையில் சந்திப்பாரா இல்லை சந்திப்பை தவிர்ப்பாரா என்பது மதியத்திற்கு மேல் தெரியும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலக்ஷன் ஃபிளாஷ்: திமுக – மதிமுக கூட்டணி? நள்ளிரவில் வைகோ சொன்ன தகவல்!
காலையில் வேலுமணி… மாலையில் எல்.முருகன்… நாட்டாமை ரூட் மாறிய பின்னணி!
அடங்கொப்பா?
🤭🤭🤭🤭🤭🤭