நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் இன்று (மார்ச் 9) ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையடுத்து தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியில் இருந்து இன்று திடீர் ராஜினாமா செய்துள்ளார். வரும் 2027ஆம் ஆண்டுவரை அவருக்கு பதவி காலம் உள்ள நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு காலியிடம் உள்ள நிலையில், தற்போது அருண் கோயல் ராஜினாமாவை தொடர்ந்து காலியிடம் இரண்டாக அதிகரித்துள்ளது.
இதனால் மொத்தம் 3 இந்திய தேர்தல் ஆணையர்களில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பணியில் உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கோயலின் ராஜினாமா காரணமாக தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிவைக்கப்படுமா என்ற ஐயம் அரசியல் கட்சிகளிடையே எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி.காவல்!
சின்னப்பிள்ளைக்கு வீடு : அண்ணாமலை, உதயநிதி ரியாக்சன்!
Spam கால் மற்றும் மெசேஜ் தொல்லையா?… இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணுங்க!