ஐந்து கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு முழு விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஹரியானா, டெல்லி, மேற்குவங்கம் உள்ளிட்ட 58 தொகுதிகளில் இன்று 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஐந்து கட்ட தேர்தல்களில் வாக்கு சதவிகித விவரங்களை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

மொத்த வாக்காளர்கள், பதிவான வாக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தின.

மேலும், வாக்குப்பதிவு முடிந்த 48 மணி நேரத்திற்குள் வாக்குப்பதிவின் முழு விவரங்களையும் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஏடிஆர் அமைப்பு மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், தேர்தல் ஆணையமானது நடைபெற்று முடிந்த ஐந்து கட்ட தேர்தல்களின் மொத்த வாக்காளர்கள், பதிவான வாக்குகள், வாக்கு சதவிகிதம் ஆகிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி…

102 தொகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தல்

மொத்த வாக்காளர்கள் – 16,63,86,344, பதிவான வாக்குகள் – 11,00,52,103 வாக்கு சதவிகிதம் – 66.14%

88 தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல்

மொத்த வாக்காளர்கள் –15,86,45,484, பதிவான வாக்குகள் –10,58,30,572, வாக்கு சதவிகிதம் – 66.71%

93 தொகுதிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தல்

மொத்த வாக்காளர்கள் – 17,24,04,907, பதிவான வாக்குகள் – 11,32,34,676, வாக்கு சதவிகிதம் – 65.68%

96 தொகுதிகளில் நடைபெற்ற நான்காம் கட்ட தேர்தல்

மொத்த வாக்காளர்கள் – 17,70,75,629 , பதிவான வாக்குகள் – 12,24,69,319, வாக்கு சதவிகிதம் – 69.16%

49 தொகுதிகளில் நடைபெற்ற ஐந்தாம் கட்ட தேர்தல்

மொத்த வாக்காளர்கள் – 8,95,67,973 , பதிவான வாக்குகள் – 5,57,10,618, வாக்கு சதவிகிதம் – 62.20%

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தோனிக்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டமா? மிரண்டு போன லக்னோ கோச்!

போக்குவரத்து Vs போலீஸ் பிரச்சனைக்கு தீர்வு எப்போது? எடப்பாடி காட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *