மீண்டும் வந்த தேர்தல் ஆணையத்தின் கடிதம்: அதிருப்தியில் எடப்பாடி

அரசியல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் அக்கட்சித் தலைமைக்குத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிமுகவுக்கு யார் தலைவர் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

நாளை மறுதினம் இந்த வழக்கு விசாரணைக்கு வரஉள்ளது.

இறுதி விசாரணையின் முடிவில் அதிமுக யார் கைக்கு போகும், அல்லது பழைய நிலையே தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில்,

தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பி வருகிறது.

வரும் ஜனவரி 16ஆம் தேதி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ‘ஆர்.வி.எம்.’ (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் இயந்திரம்) என்ற புதிய மின்னணு இயந்திரம் தொடர்பாக அந்தந்த மாநிலங்களின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்துக் கேட்கவுள்ளது.

இதற்காகத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிமுக தலைமைக்குக் கடிதம் அனுப்பியது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இதற்கு எடப்பாடி தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துத் திருப்பி அனுப்பினர். தேர்தல் ஆணையத்திலிருந்து வந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி யாரும் இல்லை எனக் கூறி அந்த கடிதம் திருப்பி அனுப்பப்பட்டது.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கூறுகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலின் அடிப்படையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளார் சத்ய பிரதா சாஹூ.

இதனால் எடப்பாடி தரப்பினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரியா

ஒப்பந்த செவிலியர்களுக்கு கூடுதல் ஊதியத்துடன் பணி!

விமர்சனம் : செம்பி – பிரச்சாரம் மட்டுமே போதுமா?

+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *