விசிகவுக்கு பானை சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.
விசிக-விற்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (மார்ச் 27) நடைபெற்றது.
விசாரணை முடிவில், பானை சின்னம் கேட்டு விசிக தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி சச்சின் தத்தா உத்தரவிட்டார்.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் விசிகவிற்கு பானை சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் இன்று மாலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விசிகவின் வாக்கு சதவீதம் குறைவாக இருப்பதாக கூறி பானை சின்னத்தை ஒதுக்க மறுப்புத் தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதனிடையே அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன.
ஆனால், எதிரணியில் இருப்பவர்களுக்கு தற்போது வரை சின்னம் ஒதுக்காமல், தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது.
தேர்தல் ஆணையம் நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.
ஆகவே, தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு இந்த நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழகத்தில் பாஜகவினர் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சியும் வெற்றி பெறாது.
தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவிற்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு, தோல்வியை சந்திக்கும்” என திருமாவளவன் தெரிவித்தார்.
தற்போது பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்திருக்கும் நிலையில் மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக முறையிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
முன்னதாக மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்புத் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு ஏன் இந்த அவல நிலை?
பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : உயர் நீதிமன்றம்!
கையாலாகாத தேர்தல் ஆணையமே பிஜேபியின் அடிமை தமிழ் மாநில காங்கிரஸின் ஓட்டு சதவீதத்தை விட விடுதலை சிறுத்தை கட்சியின் ஓட்டு சதவீதம் குறைவாக உள்ளதா பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதத்தை விட சற்றே விடுதலை சிறுத்தை கட்சி சதவீதம் குறைவாக உள்ளதா… தேர்தல் ஆணையமே..மக்களின் நம்பிக்கையை கொடுத்து விடாதீர்கள்
சிந்திக்க வேண்டும்
தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டினால் மக்களுக்காக என்று அமைக்கப்பட்ட இந்த சாசனம் சரியாக செயல்படவில்லை என்று இந்த தேர்தல் ஆணையத்தினை கலைத்து விடலாம்…
அக்கிரும்மம்யா ஆறு இஸ்டேட்ல போட்டி போட போறாங்களாம்…ஒரு தேசிய கட்சிக்கு போய்….🤣🤣🤣🤣🤣🤣