அதிமுக சின்னமான இரட்டை இலை விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 25) தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், “அதிமுக கட்சி சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்பட்டது தொடர்பாகவும், உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 – 2022ஆம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளேன்.
உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
என் மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் இன்று (நவம்பர் 25) விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில், ஒரு வாரத்தில் இந்த விண்ணப்பம் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை வரும் டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
உதயநிதி துணை முதல்வரான பிறகு கூடும் சட்டமன்றம்: அப்பாவு அறிவிப்பு!
ஷாஹி ஜமா மஸ்ஜித் கலவரம்… 5 பேர் பலி: உத்தரப் பிரதேசத்தில் நடப்பது என்ன?