நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நாளை (மார்ச் 16) வெளியிட உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று அனைத்து கட்சிகள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நாளை மாலை 3 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி மற்றும் சில மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளார்
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்குமார் பதவியேற்பு
தேர்தல் பத்திரம் வழக்கு: எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!