மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 20) ஒதுக்கியுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்கிறது. இந்தநிலையில், அமமுகவுக்கு பாஜக இன்று இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
கமலாலயத்தில் இன்று தொகுதி உடன்பாட்டிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜக அறிவித்தவுடன், அமமுகவுக்கான தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அமமுகவிற்கு தேர்தல் ஆணையம் இன்று குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது டிடிவி தினகரன் குக்கர் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டிடிவி தினகரனுக்கு பரிசுப் பெட்டி சின்னம் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழச்சி Vs தமிழிசை: தென்சென்னையில் சூடு பிடிக்கும் களம்!
வெறுப்பு பேச்சு: மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை.. தேர்தல் ஆணையம் உத்தரவு!