இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தப் பணிகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 1) சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதில்,
“சாதி, மத குழுக்களிடையே வெறுப்பு அல்லது பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது.
வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் பொய்யான அறிக்கைகளை வெளியிடக்கூடாது.
மற்ற கட்சிகளின் தலைவர்கள் அல்லது தொண்டர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க கூடாது.
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் அல்லது எந்த வழிபாட்டுத் தலங்களும் தேர்தல் பிரச்சாரம் அல்லது தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படக்கூடாது.
பெண்களின் கெளரவம் மற்றும் கண்ணியத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
சரிபார்க்கப்படாத மற்றும் தவறான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடக்கூடாது.
போட்டியாளர்களை இழிவுபடுத்தும் மற்றும் அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இளைஞர்களின் மனங்கவர்ந்த ‘இருசக்கர’ வாகனம் இதுதான்!
சீமானிடமிருந்து கை நழுவிப் போகிறதா கரும்பு விவசாயி சின்னம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?