அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6.05 கோடி நன்கொடை வாங்கியுள்ளது.
இதில், 5 கோடி ரூபாயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளது.
03.04.2019. 03.04.2019 ஆகிய தேதிகளில் தலா ஒரு கோடி என 2 கோடி ரூபாயும், தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 30 பத்திரங்கள் மூலம் 3 கோடி ரூபாயும் கொடுத்துள்ளது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்.
இந்த தகவலை 2023 நவம்பர் 10ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.
சென்னை, அடையாறு பகுதியைச் சேர்ந்த கோபால் ஸ்ரீனிவாசன் 5 லட்சம் ரூபாய் 2019ஆம் ஆண்டில் கொடுத்துள்ளார்.
லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனமும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.1 கோடியை அதிமுகவுக்கு நிதியாக அளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
எலெக்ஷன் ஃபிளாஷ்: ஸ்டாலினுக்கு சாதகமான அதிகாரிகள்… அதிமுக தயாரிக்கும் பட்டியல்!
தேர்தல் பத்திர நிதி : திமுக யார் யாரிடம் எவ்வளவு பெற்றது? – பட்டியல் இதோ!
ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் செல்ல தடை : இதுவரை பறக்கும் படை பறிமுதல் செய்தது எவ்வளவு?