Supreme Court order to SBI Bank
அரசியல் கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 15) உத்தரவு பிறப்பித்தது.
தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் இந்த திட்டம் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்யும் எஸ்.பி.ஐ வங்கிக்கு பிறப்பித்த 6 முக்கிய உத்தரவுகள்…
1. எஸ்.பி.ஐ வங்கி இன்றுடன் தேர்தல் பத்திரங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும்.
2. 2019 ஏப்ரல் 12ஆம் தேதியிட்ட இடைக்கால உத்தரவு பிறப்பித்தது முதல் இன்றுவரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தையும் வாங்கிய தேதி, பத்திரத்தை வாங்கியவரின் பெயர் மற்றும் தேர்தல் பத்திரத்தின் மதிப்பு ஆகிய விவரங்களோடு சமர்ப்பிக்க வேண்டும்.
3. 2019 ஏப்ரல் 12, தேதியிட்ட இடைக்கால உத்தரவு முதல் இன்று வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் பங்களிப்புகளைப் பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்கள், அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் ஒவ்வொரு தேர்தல் பத்திரங்களின் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
4. இன்று முதல் மூன்று வாரங்களுக்குள் அதாவது மார்ச் 6 ஆம் தேதிக்குள் இந்த விவரங்கள் எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
5. மார்ச் 13, 2024க்குள் எஸ்பிஐயிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
6. நன்கொடை வழங்குவோரால் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விநியோகிக்கப்பட்ட பத்திரங்களில் அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத பத்திரங்களை மீண்டும் வாங்கியவர்களிடம் கொடுக்க வேண்டும். அதை அவர்கள் வங்கியில் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளலாம்” என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
‘SK 23’ படப்பிடிப்பில் அவசரமாக இணைந்த சிவகார்த்திகேயன்… பின்னணி இதுதான்!
திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை: எடப்பாடி
Supreme Court order to SBI Bank