விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆவார்.
இவர் விசிகவின் வேட்பாளராக நிற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் இரண்டில் ஒரு பொதுத் தொகுதியை திமுகவிடம் திருமாவளவன் கேட்டு வருகிறார். அதில் ஆதவ் அர்ஜீனாவை நிற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியின் சிட்டிங் எம்.பியாக பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி இருந்து வருகிறார். அவர் அத்தொகுதியினை மீண்டும் தனக்கு கேட்டு வருகிறார். பெரம்பலூர் தொகுதியின் சிட்டிங் எம்.பியாக பாரிவேந்தர் இருக்கிறார். அவர் பாஜக கூட்டணிக்கு சென்றுவிட்ட நிலையில் அந்த இடத்தினை அமைச்சர் கே.என்.நேரு தனது மகன் அருண் நேருவிற்கு முயற்சித்து வருகிறார்.
ஆதவ் அர்ஜுனா சபரீசனுக்கு நெருக்கமானவர். அவர் மூலமாக உதயநிதியிடம் பேசிய பிறகு, அர்ஜூனாவிற்கு சீட் கொடுத்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதன் காரணமாக தனக்கு கண்டிப்பாக கள்ளக்குறிச்சி அல்லது பெரம்பலூர் சீட் வேண்டும் என விசிகவில் கேட்டு நிற்கிறார் ஆதவ் அர்ஜூனா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதம்: கட்சிகள் என்ன சொல்கின்றன?
நடிகர் விஜய்யின் கட்சிக்கு ஆதரவா? : பதறிய ஜெயம் ரவியின் பளீர் பதில்!
INDvsENG : டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்