Education should foster knowledge and fraternity

”கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும்”: மோடி

அரசியல்

Education should foster knowledge and fraternity

கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதிய விமான நிலைய முனையம், கல்பாக்கத்தில் விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலை உட்பட ரூ.19,850 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (ஜனவரி 2) திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.

முதல் நிகழ்வாக பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ”எனது மாணவ குடும்பமே.. பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று.

ஏனென்றால், புத்தாண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். மிக அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் அறிவான இளைஞர்களுடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் முதல் பிரதமர் என்ற வகையில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பண்டைய காலத்திலேயே பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் போன்று காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளும் கல்வியில் சிறந்து விளங்கியது.

தற்போது இந்தியாவை உலக நாடுகள் நம்பிக்கையுடன் பார்க்கிறது. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா புதிய உயரங்களை படைத்து வருகிறது.

பல்கலைக்கழங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலைகழகங்களை தொடங்கி கல்விக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும். மொழியையும், வரலாற்றையும் படிக்கும் போது கலாச்சாரம் வலுப்படும்.

‘புதியதோர் உலகு செய்வோம்’ என்ற பாரதிதாசன் கூற்றுப்படி, 2047-ஐ நோக்கி பயணிப்போம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவின் திறமையை நமது இளைஞர்கள் உலகுக்கு பறைசாற்றுகிறார்கள்.

பல்கலைக்கழகத்தில் படிப்பதோடு உங்கள் கற்றல் நின்று விடக்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தேவையான திறன்களை வளர்த்து கொண்டு இருக்க வேண்டும். நமது திறமைகளை உலக அளவிற்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

இந்த பட்டமளிப்பு விழா உடை அணிந்திருந்தால் உங்களை தெரியாதவர்கள் கூட உங்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். சாமானியர்களை உள்ளடக்கிய இந்த சமூகம் உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. நீங்கள் பட்டம் பெற்றதில் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பங்கு உண்டு.

எனவே ந்த சமூகத்துக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இந்த சமூகம் உங்களை நம்பிக்கையுடன் பார்க்கிறது. வரலாற்றில் பல மாற்றங்கள், சாதனைகளுக்கு காரணமாக இருந்தவர்கள் மாணவர்களே. கற்ற கல்வியும், அறிவியலும் வேளாண்மையை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கும் கைகொடுக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதை: பாரதிதாசன் பல்கலை விழாவில் முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

Education should foster knowledge and fraternity

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *