Edappadi urge to give 5000

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிவாரணம்: எடப்பாடி வலியுறுத்தல்!

அரசியல்

பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, அண்ணா உள்ளிட்ட போக்குரத்து தொழிற்சங்கங்கள் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் பண்டியை முன்னிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

Edappadi urge to give 5000

இந்தநிலையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 6) வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கடந்த 8.1.2024 அன்று போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து 9.1.2024 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

10.1.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றம், பொங்கல் திருநாளை முன்னிட்டு வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 2,000 வழங்க அரசுக்கு அறிவுரை வழங்கியதோடு, ஜனவரி மாதம் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. ஆனால், இந்த திமுக அரசு இடைக்கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்க மறுத்துவிட்டது.

பொங்கலுக்குப் பிறகு, தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் முன்பாக நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தொழிற்சங்கத்துடன் ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த அரசு குழு அமைத்தது.

ஆனால், அந்தக் குழு இன்றுவரை கூடவில்லை. இறுதியாக, 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை வழங்கியது.

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க 6.2.2024 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உடனே இந்த திமுக அரசு போக்குவரத்து வருவாய்த் துறை சார்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் புதிதாக ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. இதனால், ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் 27.2.2024 அன்று பல்லவன் இல்லம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர்.

Edappadi urge to give 5000

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைத் துவங்க வேண்டும், இல்லையென்றால் தொழிலாளர்களுக்கு உடனடியாக ரூ.5,000 இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகச் செய்திகள் தெரிய வருகின்றன.

அதைத் தொடர்ந்து, தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் இன்று (6.3.2024) நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலன் என்று வேஷம் போடும் இந்த திமுக அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்று, இடைக்கால நிவாரணமாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையினை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

யோகி பாபுவை தேடி வந்த ஹிந்தி பட வாய்ப்பு!

பரிசு தராத கணவன்… கத்தியால் குத்திய மனைவி – பெங்களூரில் நடந்த விபரீதம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *