எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பிரச்சினையை எழுப்பி சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று(அக்டோபர் 17) இரங்கல் தீர்மானத்துடன் தொடங்கியது.
திமுக எம்.எல்.ஏக்களும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவைக்கு வரவில்லை.
இந்தநிலையில் இன்று பேரவை கூடியதும் கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்பாகவே, எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவரை மாற்றிவிட்டதாக முறைப்படி கடிதம் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் சபாநாயகர் அப்பாவுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது சபாநாயகர், கேள்வி நேரம் முடிந்ததும் அலுவல் நேரத்தில் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன் என்று கூறினார்.
ஆனால் இதனை ஏற்காத எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலை.ரா
1 ரூபாய்க்கு சட்டை வாங்க முண்டியடித்த இளைஞர்கள்!
சபாநாயகருடன் சந்திப்பு: சட்டப்பேரவையில் பங்கேற்பாரா எடப்பாடி