அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23) தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் தனது ஆதரவாளர்களை தயார் நிலையில் இருக்குமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இன்னும் சில நிமிடங்களில் வழங்கப்பட உள்ளது.
தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது என்பதை நேற்றே அறிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள வில்லரசம்பட்டியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தங்களுக்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும் என்று கணித்துள்ள எடப்பாடி, ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதனை பிரம்மாண்டமாக கொண்டாட தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த கொண்டாட்டங்கள் தேர்தல் விதிமீறலில் வராது என்பதால் அவரது தொண்டர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை முதலே அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா