2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைக்காது என்று எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 13) தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. மருத்துவ துறையை சார்ந்தவர்களுக்கு தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பாலாஜி விரைவில் பூரண குணமடைய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரோத திமுக அரசு அகற்றப்பட வேண்டும். பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைக்காது. நாங்கள் மற்ற கட்சிகளுக்கு தான் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்திருப்பதால் இளைஞர்களின் ஓட்டு அவர் பக்கம் சாய வாய்ப்புள்ளதா என்று எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தேர்தல் முடிந்த பிறகு தான் யார் யாருக்கு எத்தனை சதவிகிதம் வாக்களித்தார்கள் என்பது தெரியவரும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்குள்ள ஒரே கட்சி அதிமுக தான். இன்றைக்கு தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அதிமுக தான் காரணம். அப்படிப்பட்ட கட்சியை மக்கள் எப்படி புறக்கணிப்பார்கள்?
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 2019 நாடாளுமன்ற தேர்தலைக் காட்டிலும் ஒரு சதவிகிதம் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். 2019 தேர்தலை ஒப்பிடும் போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஏழு சதவிகித வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘இது என் கட்சி, வெளியே போடா’… நெல்லை நாதக கூட்டத்தில் நடந்த களேபரம்!
சென்னையில் சோகம்… எலி மருந்தின் நெடியால் 2 குழந்தைகள் மரணம்!