தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தினார்.
இந்த பாடலில் மூன்றெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது என்ற வரி வரும்போது, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் நடுவே விஜய் நின்றுகொண்டிருப்பது போல பாடல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேள்வி கேட்பட்டது.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “எங்களுடைய தலைவருக்கு கிடைத்த பெருமையாக இதை நான் கருதுகிறேன். ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக எங்கள் தலைவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியவில்லை.
அதிமுக தலைவர்களை குறிப்பிட்டால் தான் கட்சியை நடத்த முடியும் என்ற எண்ணத்தில் அவர் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தியிருக்கலாம்” என்றார்.
தொடர்ந்து விஜய்யுடன் எதிர்காலத்தில் அதிமுக கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு, “அவர் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை. கூட்டணி அமையுமா இல்லையா என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யக்க்கூடியது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணா பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு… பொன்முடி அறிவிப்பு!
“சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு”… வானிலை மையம் அப்டேட்!