பொதுச்செயலாளரான எடப்பாடி: வெளியிட்ட முதல் அறிவிப்பு!

Published On:

| By Selvam

அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் தலைமை கழகத்தில் விநியோகிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்ககோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 28) தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அதிமுக உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமை சீட்டுக்களை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறைப்படி கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் வருகின்ற 5.04.2023 புதன்கிழமை முதல் தலைமை கழகத்தில் விநியோகிக்கப்படும்.

கழக உடன்பிறப்புகள் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து ஒரு உறுப்பினருக்கு ரூ.10 வீதம் தலைமை கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு: ஓபிஎஸ் மேல்முறையீடு!

“எடப்பாடியின் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது”: வைத்திலிங்கம்