தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 29) தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக சிறப்பாக செயல்பட்டதால் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை. திமுகவும் பாஜகவும் மறைமுகமாக அண்டர்கிரவுன்ட் டீலிங் வைத்திருக்கிறார்கள் என்று நாங்கள் சொன்னதைத் தான் விஜய்யும் சொல்லியிருக்கிறார்.
அதிமுக வாக்கை விஜய்யால் பிரிக்க முடியாது. எம்.ஜி.ஆர் பெயரை சொன்னால் தான் கட்சியை நடத்த முடியும் என்ற ஒரு நிலை இப்போது இருக்கிறது. திமுக அரசின் மக்கள் விரோத போக்கை அதிமுக மட்டும் தான் சுட்டிக்காட்டி வந்தது. தற்போது விஜய்யும் எங்களுக்கு ஆதரவாக அதை சுட்டிக்காட்டுகிறார்” என்றார்.
தொடந்து விஜய்யுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. இப்போது தான் அவர் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணி என்பது அந்தந்த சூழலுக்கு தக்கவாறு அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
ராகவா லாரன்ஸ் நடிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம்!
தமிழக கோயில் கல்வெட்டில் கமலா ஹாரீஸ் பெயர்… பின்னணி என்ன?