அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அதில், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர்களை நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை கடந்த மார்ச் 3ஆம் தேதி விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, எதிர்த்தரப்பு வாதங்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறியதுடன் இந்த மனு தொடர்பாக மார்ச் 17ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஈபிஎஸ் தரப்பினருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்குப் பின் மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு செல்லாததாகிவிட்டது, எனவே இந்த அவரது வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
பிரியா
ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!
ஆவின் பால் தட்டுப்பாடு : முதல்வருடன் அமைச்சர் ஆலோசனை!