அதிமுக பொதுக்குழு தொடர்பாகப் பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 17) பன்னீர் தரப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.
பன்னீரை நீக்கியது செல்லாது, எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து பன்னீர் தரப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்ய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதி அமர்வில் எடப்பாடி தரப்பினர் மேல்முறையீடு செய்ய ஆலோசனை செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பின் சாராம்சம் என்ன?
+1
+1
2
+1
+1
3
+1
+1
1
+1