ஜெயலலிதாவின் கனவு : நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Kavi

AIADMK office in Delhi

டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 10) தொடங்கி வைத்தார். AIADMK office in Delhi

டெல்லியில் அதிமுக அலுவலகம் கட்டுவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2010ஆம் ஆண்டு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து மெஹ்ராலி பதர்பூர் சாலையில் ஆயிரத்து நூறு சதுர அடிக்கு இடம் வாங்கினார்.

2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்ற நிலையில், 2015ஆம் ஆண்டு டெல்லியில் அதிமுகவுக்கு அலுவலகம் கட்டும் பணி தொடங்கியது.

AIADMK office in Delhi

ரூ.10 கோடி மதிப்பீட்டில் தரை தளம், முதல், இரண்டாவது, மூன்றாவது என 4 தளங்களுடன் கட்டப்பட்டது.

இந்த அலுவலகத்திற்கு எம்ஜிஆர்- அம்மா மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த அலுலவகத்தை திறப்பதற்கான வேலைகளை பார்க்க முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தளவாய் சுந்தரம், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் உள்ளிட்டோர் டெல்லி சென்று வந்தனர். இதுதொடர்பாக மின்னம்பலத்தில் டெல்லியில் வட்டமடிக்கும் அதிமுக பிரமுகர்கள் – காரணம் இதுதான்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், டெல்லி அதிமுக அலுவலகத்தை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 10) திறந்து வைத்தார்.

ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து காணொளி மூலம் நடந்த இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

AIADMK office in Delhi

அலுவலகத்தை திறந்து வைத்ததும், எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

டெல்லியில் இருந்தவாறு நேரடியாக சி.வி.சண்முகம், தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

டெல்லியில் அதிமுகவுக்கு அலுவலகத்தை திறக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கனவு, அதை இன்று நிறைவேற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. AIADMK office in Delhi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share