தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை (நவம்பர் 23) சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சித் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
பயங்கரவாத செயல்கள் தமிழகத்தில் வேரூன்றி இருப்பதாகக் குறிப்பிடும் அவர், முதல்வர் கையில் உள்ள காவல்துறை தற்போது திமுகவின் ஏவல் துறையாக இருப்பதாகவும் விமர்சித்து வருகிறார்.
அதுபோன்று கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட சீர்காழி சுற்றுவட்டார பகுதியை முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போதும் அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருந்ததாகவும், நாளை மதியம் 12.45 மணி அளவில் ஆளுநர் நேரம் ஒதுக்கியிருப்பதாகவும், அப்போது தமிழகத்தின் நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார் என்றும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
கோவை கார்வெடிப்பு : 6 பேருக்கும் காவல் நீட்டிப்பு!
அவ்வை நடராசன் இறுதி ஊர்வலம் : உடலை சுமந்து சென்ற வைரமுத்து, ஜெகத்ரட்சகன்