மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ள மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளார்.
அவருக்கு இந்திய தலைவர்கள் தொடங்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மோடிக்கு வாழ்த்து மழை குவிந்து வந்த நிலையில், மூன்று நாட்கள் கழித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள பிரதமர் மோடிக்கு எனது மற்றும் அதிமுக சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக, பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துகொண்டது. தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.
ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் 35 இடங்கள் வரை வென்றிருப்போம். அண்ணாமலையால் தான் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது என்று கூறியிருந்தார்.
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,தோல்வி விரக்தியில் பேசுகிறார். வேலுமணிக்கும் – எடப்பாடிக்கும் இடையே பிரச்சினை என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
வேலுமணியின் கருத்து பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
அதேசமயம் அனுமானத்தின் அடிப்படையில் வேலுமணி பேசியிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மோடி 9ஆம் தேதி மூன்றாவது முறையாக பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”வந்துட்டேன்னு சொல்லு” – விண்வெளி நிலையத்தில் நடனமாடிய சுனிதா வில்லியம்ஸ்