எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் கணக்கு பெயரை மாற்றியுள்ளார். Edappadi Palaniswami changes his X account name
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. திமுக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தநிலையில்,பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை செய்தார். அதில் டிஜிபி சங்கர் ஜுவால் மற்றும் பல்வேறு துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே இன்று (பிப்ரவரி 12) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டார்.
பள்ளி டூ பல்கலை மாணவி வரை Edappadi Palaniswami changes his X account name
இதில் கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போதுவரை நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார்.
“ அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி. ‘யார் அந்த சார்?.
கிருஷ்ணகிரியில் 13 வயது அரசுப் பள்ளி மாணவியை மூன்று ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு!
வேலூரில், இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து, ஆறு பேர் கொண்ட காமுக கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!
தூத்துக்குடியில் 5 மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் தொல்லை.
சென்னையில் சிறுமிக்கு கிக்பாக்சிங் பயிற்சியாளரால் பாலியல் சீண்டல்.
திருப்பூரில் 17 மாணவிகளுக்கு, விடுதி வார்டனால் பாலியல் தொல்லை.
திருவள்ளூரில் மூன்றாம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியரால் பாலியல் தொல்லை.
சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி, 10-க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமை.
சென்னையில் ஓட்டுநர் பயிற்சிக்கு வந்த கல்லூரி மாணவிக்கு, பயிற்சியாளரால் பாலியல் தொல்லை.
தஞ்சாவூரில் இளம் பெண்ணுக்கு கல்லூரி ஆசிரியரால் பாலியல் தொல்லை.
தருமபுரியில் 3 சிறுமிகளுக்கு ஓட்டுநரால் பாலியல் தொல்லை.
கும்பகோணத்தில் கல்லூரி மாணவிக்கு அரபி வகுப்பு ஆசிரியரால் மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை.
சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு.
திருவண்ணாமலையில், 10-ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியரால் பாலியல் சீண்டல்.
சென்னை, IIT-யில் Ph. D., மாணவியிடம் பேக்கரி ஊழியர் பாலியல் சீண்டல்.
திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் பாலியல் தொல்லை.
கன்னியாகுமரியில் ஓடும் பேருந்தில் சிறுமிக்கு போதை ஆசாமியால் பாலியல் தொந்தரவு.
சென்னையில் மூன்று பள்ளி மாணவிகளுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை.
ஒசூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்.

விழுப்புரத்தில் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை.
சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே 18 வயது இளம் பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல்.
திருச்சி, மணப்பாறையில் 2 மாணவிகளுக்கு, தாளாளரின் கணவர் உள்ளிட்ட 5 பேர் பாலியல் சீண்டல்,
கோவையில் 14 வயது பள்ளி மாணவிக்கு ஆட்டோவில் பாலியல் தொல்லை,
விழுப்புரத்தில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியரால் பாலியல் தொல்லை,
திருப்பூரில் மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் சீண்டல்.
புதுக்கோட்டையில் பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் தொல்லை” என பாலியல் கொடுமைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் Edappadi Palaniswami changes his X account name
மேலும் அவர், “ இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் மிகுந்த அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர். இந்த அவல நிலைக்குக் காரணமான முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு, பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் வரும் 18ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.
அதுபோன்று தனது எக்ஸ் தள கணக்கு பெயரிலும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாற்றம் செய்துள்ளார்.
இதுவரை போதைபொருள் புழகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து #SayNoToDrugs_SayNoToDMK என்று தனது பெயருக்கு அருகே இணைத்திருந்தார். திமுக பெயரை குறிப்பிட்டு போட்டிருப்பதால இதற்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.
இந்தசூழலில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி, இப்போது SayYesToWomenSafety&AIADMK என்று குறிப்பிட்டுள்ளார்.