அமைச்சர் உதயநிதிக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்கள் பிரச்சினையைத் திசை திருப்பவே சனாதனம் குறித்து உதயநிதி பேசுகிறார்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விளையாட்டுத் துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்
அதில், “சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டில் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் தேடும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆட்டுத் தாடிக்குப் பின்னால் நீண்ட காலம் ஒளிய முடியாது; ஆடு ஒருநாள் இருக்காது என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தச்சூழலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னைப்பற்றி அவதூறாகப் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 11) வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “தன்னைப்பற்றி அவதூறாகப் பேசியதற்காக உதயநிதி தனக்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
பிரியா
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் என்ன சாதிக்கப்போகிறீர்கள்? – உதயநிதி கேள்வி!
டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!