டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று (செப்டம்பர் 14) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் பாஜக அரசு மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக இந்தியா கூட்டணியிலும் அதிமுக என்டிஏ கூட்டணியிலும் அங்கம் வகிக்கின்றன. இரண்டு கூட்டணி சார்பில் நடைபெறும் கூட்டங்களில் அக்கட்சி தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்தசூழலில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றார். இரவு 8 மணியளவில் கிருஷ்ணன் சாலையில் உள்ள அமித்ஷா இல்லத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அவருடன் மொழிபெயர்ப்பாளர் மட்டுமே உடன் சென்றார்.
இந்த சந்திப்பின் போது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தமிழக அரசியல் சூழல், சனாதான தர்மம், அதிமுக பாஜக கூட்டணி, தேர்தல் தொகுதி பங்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
செல்வம்
எண்ணூர் தனசேகரன் தற்கொலை மிரட்டல்: பின்னணி இதுதான்!