கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் இருவரை அதிமுக என ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில தேர்தல் அதிகாரிக்கு எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 22) கடிதம் அனுப்பியுள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் அன்பரசன் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து அன்பரசன் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அதனை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.
அதேவேளையில் புலிகேசி நகர், கோலார் தங்க வயல் மற்றும் காந்திநகர் என 3 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று தனது ஆதரவு வேட்பாளர்களை ஓபிஎஸ் அறிவித்தார்.
அவர்களின் வேட்பு மனு பரிசீலனையின் போது புலிகேசி நகரில் போட்டியிடும் நெடுஞ்செழியனின் மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்த அதிகாரிகள், காந்திநகர், கோலார் தங்கவயலில் போட்டியிடும் குமார் மற்றும் அனந்தராஜ் ஆகிய 2 பேரின் மனுக்களும் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இருவரையும் அதிமுக வேட்பாளர்கள் என்றே அவர்களின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்றனர்.
இந்த நிலையில், ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் இருவரை அதிமுக வேட்பாளர்களாக ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை அதிகாரிக்கு அதிமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று எழுதியுள்ள கடிதத்தில், “கர்நாடகாவில் புலிகேசி நகரில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனுவை ஏற்றுள்ளனர்.
உண்மையான அதிமுக நாங்கள் தான். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி55!
அட்சய திருதியை நாளில் தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி!