நாளை டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

அரசியல்

அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி நாளை (செப்டம்பர் 14) டெல்லி செல்ல உள்ளார்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மற்றும் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்கிறார். அங்கு அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியாக அதிமுக இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் நாளை டெல்லி செல்லும் எடப்பாடி அங்கு பல்வேறு விஷயங்கள் குறித்து பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வரும் 18 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் துவங்க உள்ள நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசுவார் என்றும்,

இந்திய அளவில் பல மாநிலங்களில் பாஜக தலைமையில் கூட்டணி கட்சிகள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தமிழ்நாட்டை பொறுத்த வரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக அங்கம் வகிக்கிறது.

ஆனால் கூட்டணியில் இருந்தாலும் தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை வந்ததில் இருந்தே அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இதனால் அவ்வப்போது கூட்டணிக்குள் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

தேர்தல் நெருங்கி வருகிறது என்பதால் இதுகுறித்தும் எடப்பாடி பழனிசாமி,  அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டாவிடம் பேசலாம் எனவும் கூறப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்: தமிழ்நாட்டில் எச்சரிக்கை!

மீண்டும் 44 ஆயிரத்துக்கு கீழ் சென்ற தங்கம் விலை!

 

 

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *