டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக அரசில் காவலர் நலவாழ்வு திட்டத்தின் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடக்கூடிய நிலையை உருவாக்கியிருந்தோம். திமுக அரசு காவலர் நலவாழ்வு திட்டத்தை நிறுத்தியுள்ளனர். அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டிருந்தால் காவல்துறை உயர் அதிகாரிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும்.
பணிச்சூழலிலும், குடும்ப சூழலிலும் டிஐஜி விஜயகுமாருக்கு மன அழுத்தம் இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பின்னர் ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுகிறது. அதனால் டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கக்கோரி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம் எழுதியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தவர் , “ரகுபதி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரிடம் ஊழல் தடுப்பு பிரிவு இருந்தால் அது எப்படி சரியாக இருக்கும். ஊழல் குறித்து அவர் பேச தகுதியில்லை. ஊழல் குற்றசாட்டு நிலுவையில் இருந்த திமுக அமைச்சர்கள் பலரும் திமுக வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து நீதிமன்றத்தில் சரியான வாதத்தை முன்வைக்காமல் விடுதலை ஆகியிருக்கிறார்கள்” என்றார்.
செல்வம்
10 கோடி பார்வையாளர்களை கடந்த ஆர்யா பட பாடல்!
“உழவர் விரோத மத்திய அரசு” – ஸ்டாலின் கடும் தாக்கு!
கொடநாடு தாமதம் ஏனோ! அதையும் கேளுங்க ஜி