மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு இலச்சினையை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 5) வெளியிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பிரம்மாண்டமான மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டது.
அதன்படியே அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான இலச்சினையை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதில் அதிமுக தலைமை கழக அலுவலகத்தின் பின்னணியில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
மேலும் அதில், ’வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் பலி: மூவர் மீது வழக்குப்பதிவு!
கலைஞர் நூற்றாண்டு நூலகம்…தமிழனாக பெருமை: அமைச்சர் அன்பில் மகேஷ்