மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 36-வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 24) மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 36-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பா.வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
எம்ஜிஆர் நினைவு தினமான இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நம் அதிமுக எனும் வீரிய விருட்சத்தின் விலை மதிக்க முடியாத விதை, தமிழகத்தில் இல்லையென்ற சொல்லை இல்லாமல் ஆக்கிட அயராது பாடுபட்ட, ஏழை எளிய மக்களின் வலிகள் அறிந்து வளர்ச்சி திட்டங்கள் வகுத்த தலைவர், தமிழக மக்கள் நெஞ்சங்களில் வாழும் எம்ஜிஆர் வகுத்து தந்த பாதையின் வழிநடந்து, அவரின் நினைவு நாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாகூர் தர்காவில் ஏ.ஆர்.ரகுமான்
கொடைக்கானலில் பனிப்பொழிவு: மலர் செடிகளைப் பாதுகாக்க நிழல் வலை!