கிருஷ்ணகிரி ஆணவ கொலை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) கவன ஈர்ப்பு தீர்மானத்தைகொண்டு வந்தார்
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த மார்ச் 20-ஆம் தேதி நிதிநிலை அறிக்கையும் அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று யுகாதி பண்டிகையை முன்னிட்டு சட்டமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
பேரவை காலை 10 மணிக்கு துவங்கியவுடன் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த ஜெகன் ஆணவ கொலை செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ளார்.
செல்வம்