அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் விசாரணையானது நடைபெற்று வரும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோரை மீண்டும் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் கவனத்திற்கு.
கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.
அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கழகப் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும்; கழகப் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே, கழக உறுப்பினர்களாகக் கருதப்படுவர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஒரு பாட்டில் தண்ணீர் 350 ரூபாய்: வாடிக்கையாளர் அதிருப்தி!
”7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்தால் புரட்சி வெடிக்கும்”- கிருஷ்ணசாமி