அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே கருத்து தெரிவித்துவிட்டார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 19) தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதித்தின் போது, “அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்… என்று இப்போது முழக்கமிடுவது ஃபேஷன் ஆகிவிட்டது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சையாக பேசியது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக நேற்று (டிசம்பர் 18) செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது பாஜகவிற்கு கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
நிச்சயமாக பாஜகவை மக்கள் நிராகரிப்பார்கள். அம்பேத்கரை போற்றவேண்டுமே தவிர, அவரது புகழை சிறுமைப்படுத்தக் கூடாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அம்பேத்கர் குறித்து அமித்ஷா சொன்ன கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று விளக்கமளித்துவிட்டார். அந்த கருத்து தான் என்னுடைய கருத்து” என்று தெரிவித்தார்.
மத்திய அரசை கண்டிக்காமல் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாக இருக்கிறார் என்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விமர்சனத்திற்கு பதிலளித்த எடப்பாடி “அமைச்சர் ரகுபதி இருக்கிற இடத்திற்கு விசுவாசமாக இருந்தது கிடையாது. அவருடைய பேச்சை நாங்கள் பொருட்படுத்துவதில்லை” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘Transformation salon’: நாட்டிலேயே முதல் திருநங்கை சலூன்!
கீர்த்தியின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்த விஜய்யின் மேலாளர்… தங்கச்சி பாசம்!
Comments are closed.