எடப்பாடி நிவாரண நிகழ்ச்சி…சிறுமி உயிரிழப்பு: DYFI போராட்டம்!

அரசியல்

சென்னை கொருக்குப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில், 16 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பிலும், கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை தி.நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

தொடர்ந்து நேற்று (டிசம்பர் 8) எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றவும், மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கவும் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

இந்தநிலையில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி மருத்துவ முகாமை எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 9) துவங்கி வைத்தார்.

அப்போது நிவாரண பொருட்களை வாங்க சென்ற 16 வயது சிறுமி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.  சிறுமியை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அங்குள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

அதன்படி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் உடல் உடற்கூராய்வு பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை விசாரணையில், உயிரிழந்த 16 வயது சிறுமி கொருக்குப்பேட்டையை சேர்ந்த யுவஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அதிமுக நிவாரண நிகழ்ச்சியில் முறையான பாதுகாப்பு வசதிகள் செய்யவில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை கொருக்குப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி நிவாரணம் வழங்கிய நிகழ்ச்சியில் சிறுமி யுவஸ்ரீ மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மழை, வெள்ளம்: சிறு,குறு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வெள்ள நிவாரண தொகை : யார் யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *