மகா விஷ்ணுவுக்கு அனுமதி கொடுத்தது யார்? – பிரஸ்மீட்டில் சீறிய எடப்பாடி!

பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் மகா விஷ்ணு பேசியது கண்டிக்கத்தது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 6) தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் பள்ளிகளில் பரம்பொருள் அறக்கட்டளையின் மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.

அப்போது பள்ளி ஆசிரியர் சங்கர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தக்கூடாது என்று மகா விஷ்ணுவுக்கு எதிராக பேசிய வீடியோக்கள் நேற்று (செப்டம்பர் 5) இரவு முதல் சோஷியல் மீடியாக்களில் வைரலானது.

இந்தநிலையில், அசோக் நகர் பள்ளிக்கு இன்று காலை சென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர் சங்கரை பாராட்டினார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பள்ளிகளுக்கு சென்று மகா விஷ்ணு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருத்திருக்கிறார். அவருக்கு எப்படி அரசு அனுமதி கொடுத்தார்கள். மாற்றுத்திறனாளி ஆசிரியரை இழிவுபடுத்தியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளை மனிதநேயத்தோடு பார்க்க வேண்டும்.

இந்த நபர் அண்மையில் அமைச்சர் அன்பில் மகேஷோடு புகைப்படம் எடுத்திருக்கிறார். அதேபோல, இன்னும் சில அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட நபர், அரசின் செல்வாக்கோடு பள்ளிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தவெக மாநாடு: 21 கேள்விகள்… பதிலளித்த புஸ்ஸி ஆனந்த்

11 YEARS OF VVS… சிவகார்த்திகேயனை ‘ஸ்டார்’ ஆக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts