பிரியா குடும்பத்துக்கு 1 கோடி இழப்பீடு கேட்கும் எடப்பாடி பழனிசாமி

அரசியல்

கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 15) கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை பெரியார் நகர் மருத்துவர்களின் கவனக்குறைவான சிகிச்சையின் காரணமாக மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை மேற்கொண்ட விளையாட்டு வீராங்கனை பிரியா இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பிரியா உயிரிழந்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,

“அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு காரணமான இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்,

இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

செல்வம்

அழைத்தார் எடப்பாடி: சென்றார் கே.என். நேரு

நடிகர் கிருஷ்ணா மறைவு: மகேஷ்பாபுவுக்கு ஆறுதல் கூறிய முதல்வர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3