ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 26) நியமித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் அதிமுக போட்டியிடும் என ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு அணியும் அறிவித்தது. ஆனால் இருவரும் வேட்பாளர் யார் என அறிவிக்க வில்லை.
எடப்பாடி பழனிசாமி அணியினர் தேர்தல் வேலையை தொடங்கியுள்ள நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஓபிஎஸ் சந்தித்து வருகிறார். தான் சந்திக்கும் தலைவர்கள் தங்களது அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் கூறுகிறார்.
இதனிடையே தொடர்ந்து 3 நாட்களாகக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த எடப்பாடி பழனிசாமி 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை நியமித்து அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இந்த தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார்.
இதில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை,
தளவாய் சுந்தரம், வளர்மதி, செல்லூர் ராஜூ, தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் என பல முன்னாள் அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.
பிரியா
நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி தந்த தங்கம் விலை!
முதன் முறையாக தேசிய கொடி ஏற்றிய திரௌபதி முர்மு