அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி: தேர்தல் ஆணையம்

Published On:

| By Selvam

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

அதிமுகவில் அமைப்பு ரீதியாக தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி மே 30-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை ஏற்றுக்கொண்டு அதிமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் தனது இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில் இன்று தனது இணையதளத்திலும் பதிவேற்றம் செய்து உறுதிசெய்துள்ளது.

செல்வம்

குழந்தைகளும் வாசிப்பும்: ஓர் கள அனுபவம்!

”சென்னை மக்கள் என்னை தத்தெடுத்து விட்டனர்”- தோனி நெகிழ்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment